லார்ட்ஸ் டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்..!
- ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டுகளை ஆர்ச்சர் வீழ்த்தினார்.
- கே.எல். ராகுல் விக்கெட்டை பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.
இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். மறுமுனையில் விளையாடிய கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் ரன்ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 82 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற்ற 111 ரன்கள் தேவைப்பட்டது.
8ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் நிதிஷ் ரெட்டி களம் இறங்கியுள்ளார். 29 ஓவரில் முடிவில் (இந்திய நேரப்படி மாலை 4.33) இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 98 ரன்கள் தேவை.
ஜடேஜா- நிதிஷ் ஜோடி நிலைத்து நின்று விளையாடினால் இந்தியா சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது. இல்லையென்றால் தோல்வியை சந்திக்கும்.