கிரிக்கெட் (Cricket)

அந்த ரன் அவுட் தான் கோலியின் மாஸ்டர் கிளாசிற்கு முற்றுப்புள்ளி வைத்தது- ஸ்டீவ் ஸ்மித்

Published On 2024-12-27 22:14 IST   |   Update On 2024-12-27 22:14:00 IST
  • விராட் கோலி அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை எளிதாக கையாள முடிந்தது.
  • அவரின் ஆட்டம் ஒரு மாஸ்டர் கிளாஸை கவனிப்பது போல் இருந்தது.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில் அந்த ரன் அவுட் தான் கோலியின் மாஸ்டர் கிளாசிற்கு முற்றுப்புள்ளி வைத்தது என ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலியின் ஆட்டம் இன்று மிகச்சரியாக இருந்தது. அவரால் அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை எளிதாக கையாள முடிந்தது. பவுலர்கள் அவரை நோக்கி வருவதற்காக காத்திருந்து ரன்களை சேர்த்தார். லெக் சைடு மற்றும் பவுன்சர் பந்துகளிலும் எளிதாக ரன்களை சேர்த்தார். அது ஒரு மாஸ்டர் கிளாஸை கவனிப்பது போல் இருந்தது.


அந்த ரன் அவுட்டை பொறுத்தவரை, ஜெய்ஸ்வால் தான் அந்த ரன்னுக்கு அழைத்தார். ஆனால் விராட் கோலி வேண்டாம் என்று நிறுத்தியதை பார்த்தேன். அதன்பின் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், அதனை எங்களால் உடைக்க முடிந்தது மகிழ்ச்சி.

அந்த ரன் அவுட் தான் விராட் கோலியின் மாஸ்டர் கிளாஸை ஆட்டத்திற்கு இடையூறாக அமைந்தது. அதனால் அவர் ஆப் திசையில் வந்த பந்தில் அவுட் ஆனார். அதன்பின் கூடுதலாக 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. மொத்தமாக 2-வது நாள் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News