ரோகித் சர்மாவின் பரிந்துரையை பிசிசிஐ நிராகரித்தது- வெளியான புதிய தகவல்
- 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது தோனி பாதியிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- இதே மாதிரி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற ரோகித் சர்மா முடிவு செய்து இருந்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் திடீரென அறிவித்தார். அவரைதொடர்ந்து விராட் கோலியும் டெஸ்டில் ஓய்வு முடிவை வெளியிட் டார்.
இருவரும் ஏற்கனவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடுவார்கள்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தோனி பாணியில் அவர் ஓய்வு பெறும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) பரிந்துரை செய்து உள்ளார். ஆனால் பி.சி.சி.ஐ. அதை நிராகரித்துள்ளது.
2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது தோனி பாதியிலேயே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதே மாதிரி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரின் பாதியிலேயே ஓய்வு பெற ரோகித் சர்மா முடிவு செய்து இருந்தார். இதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது. இங்கிலாந்து தொடரில் அவரை கேப்டனாக இல்லாமல் வீரராகவே தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தான் ரோகித் சர்மா திடீர் ஓய்வு முடிவை எடுத்ததாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.