ஐசிசி ODI தரவரிசை: ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் லாரா வால்வார்த்
- அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது .
- இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ஆனால் அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்டருமான லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 9 இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து மீண்டும் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்தார். லாரா வால்வார்த் 2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 -0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் லாரா வால்வார்த் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.