கிரிக்கெட் (Cricket)

வீடியோ: ஆஸ்திரேலிய மண்ணில் பயிற்சியை தொடங்கிய ரோகித் - விராட்

Published On 2025-10-16 16:05 IST   |   Update On 2025-10-16 16:05:00 IST
  • ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது.
  • இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

முதலில் தொடங்கும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நேற்று டெல்லியில் இருந்து 2 கட்டமாக இந்திய வீரர்கள் சென்றனர்.

இந்நிலையில் இன்று இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தனர். அங்கு ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். இதனையடுத்து பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா பேட்டிங் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News