கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 225 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா

Published On 2025-07-13 11:37 IST   |   Update On 2025-07-13 11:37:00 IST
  • முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது.
  • ஷமர் ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் ஏற்கனேவே ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

Tags:    

Similar News