கிரிக்கெட் (Cricket)

விராட் கோலி, ரோகித் சர்மாவின் எதிர்காலம் என்ன? சுப்மன் கில் விளக்கம்

Published On 2025-10-09 17:43 IST   |   Update On 2025-10-09 17:43:00 IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சாதாரண வீரராக மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை பெற்று தந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவை சாதாரண வீரராக மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன என்பது குறித்து சுப்மன் கில்லிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கில் கூறியதாவது:-

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளனர். அவர்களின் ரெக்கார்டை அவ்வளவு எளிதாக யாராலும் மேட்ச் செய்யவே முடியாது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் திறமை, அனுபவம் ஆகியவற்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தற்போதைய சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரின் இந்திய அணியின் எதிர்கால திட்டத்தில் இருக்கின்றனர்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடனான நட்பு சிறப்பாக உள்ளது. இந்திய அணி வீரர்களை பாதுகாப்புடன் உணர வைப்பது எப்படி என்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து வருகிறோம்.

என்று கில் கூறினார். 

Tags:    

Similar News