விளையாட்டு
செனகல் நாட்டில் வெற்றி கொண்டாட்டம் - தேசிய விடுமுறையை அறிவித்தார் அதிபர்
ஆப்பிரிக்க கால்பந்து கோப்பையை செனகல் முதல் முறையாக வென்றுள்ள நிலையில்,வெற்றியை கொண்டாட தேசிய விடுமுறை வழங்கப்படுவதாக அதிபர் மேக்கி சால் அறிவித்து உள்ளார்.
33-வது ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி கேமரூன் நாட்டில் நடந்தது. இறுதிப்போட்டியில் செனகல்-எகிப்து அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த போட்டியில் 90 நிமிடங்கள் நடைபெற்ற முழு ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிட நேரத்திலும் இருஅணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் செனகல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து தொடரில் 2002-ம் ஆண்டு கேமரூனிடமும், 2019-ம் ஆண்டு அல்ஜீரியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை கோட்டை விட்ட செனகல் அணி 2022ம் ஆண்டுக்கான போட்டியில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது.
ஆப்பிரிக்க கால்பந்து கோப்பையை செனகல் முதல் முறையாக வென்றுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து வெற்றிக் கொண்டாட்டத்திற்காக சம்பளத்துடன் கூடிய தேசிய விடுமுறை வழங்கப்படுவதாக செனகல் அதிபர் மேக்கி சால் அறிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... இங்கிலாந்தின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக காலிங்வுட் நியமனம்