டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன்: 4வது சுற்றில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

Published On 2026-01-26 05:25 IST   |   Update On 2026-01-26 05:25:00 IST
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
  • இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

மெல்போர்ன்:

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லேனர் டீன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லேர்னர் டீன் 6-4, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து மெத்வதேவ் வெளியேறினார்.

Tags:    

Similar News