டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன்: சின்னர், முசெட்டி 4-வது சுற்றுக்கு தகுதி
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர், அமெரிக்காவைச் சேர்ந்த எலியட் ஸ்பிசிரி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்தார் சின்னர். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் அடுத்த 3 செட்களை 6-3, 6-4, 6-4 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் 5-வது வரிசையில் உள்ள இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 5-7, 6-4, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசு வீரர் தாமஸ் மச்சாக்கை போராடி வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.