டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன்: அல்காரஸ், ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2026-01-26 02:16 IST   |   Update On 2026-01-26 02:16:00 IST
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
  • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் நான்காவது சுற்றில் வென்றார்.

மெல்போர்ன்:

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (8-6), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News