விளையாட்டு
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

தந்தையின் இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது- சுரேஷ் ரெய்னா உருக்கம்

Published On 2022-02-07 14:22 IST   |   Update On 2022-02-07 14:34:00 IST
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது வலிமையின் தூணை இழந்துவிட்டதாக தந்தையின் பிரிவை உருக்கமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் நேற்று காலமானார். ராணுவ அதிகாரியான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், திரிலோக்சந்த் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தந்தையை இழந்த சுரேஷ் ரெய்னா அவரது பிரிவை உருக்கமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

தந்தையை இழந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரது மறைவால் எனது வலிமையின் தூணை இழந்துவிட்டேன். அவர் தனது கடைசி மூச்சு வரை உண்மையான போராளியாக இருந்தார். உங்களது ஆன்மா சாந்தியடையட்டும் அப்பா. உங்களை எப்போதும் மிஸ் செய்வேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. வீரர்கள் சவால் விடும் வகையில் விளையாட வேண்டும் - ரோகித் சர்மா

Similar News