செய்திகள்

கதவை உடைத்த நடுவர் மீது நடவடிக்கை இல்லை - இந்திய கிரிகெட் வாரியம்

Published On 2019-05-11 10:00 GMT   |   Update On 2019-05-11 10:00 GMT
நோ பால் விவகாரத்தில் கோபம் அடைந்த நடுவர் கதவை உடைத்ததற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜல் லாங். ஐ.பி.எல். போட்டியின் போது நோபால் விவகாரம் தொடர்பாக அவருடன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி, உமேஷ்யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.



இந்த அதிருப்தி காரணமாக நடுவர் நைஜல் பெவிலியன் திரும்பிய போது கோபம் அடைந்து நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையை வழங்கினார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர்தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இதோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்றார்.
Tags:    

Similar News