null
வங்கதேசத்தில் இந்து பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை!
- பனிக்கட்டி தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
- வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
வங்கதேசத்தில் ராணா பிரதாப் பைராகி என்ற 45 வயதுடைய இந்து பத்திரிக்கையாளர், இன்று (ஜன.5) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், ராணா பிரதாப்பின் தலையில் பலமுறை சுட்டுவிட்டுத் தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து 7 காலித் தோட்டாக்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஜெசோர் மாவட்டத்தின் மணிரம்பூர் பகுதியில் உள்ள கோபாலியா சந்தையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராணா பிரதாப் நரைல் மாவட்டத்தை மையமாகக் கொண்ட 'பிடி கோபோர்' (BD Khobor) என்ற நாளிதழின் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மேலும், அப்பகுதியில் பனிக்கட்டி தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
ஜஷோரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பிரதாப் மீது பல வழக்குகள் இருப்பதாகவும், தீவிரவாதக் குழுவுடனும் தொடர்பு இருப்பதாகவும், இந்தக் கொலைக்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாது என்றும் அந்தப் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் அபுல் காஷேம் கூறியுள்ளார்.
டிசம்பர் மாதம் முதல் இதுவரை வங்கதேசத்தில் ஐந்து இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.