செய்திகள்

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் - சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் சமீர் வர்மா

Published On 2018-11-25 13:54 GMT   |   Update On 2018-11-25 13:54 GMT
உ.பி.யில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். #SyedModiInternational #SameerVerma
லக்னோ:

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவும் மோதினர்.

சீன வீரர் அபாரமாக ஆடியதால், 16-21 என்ற கணக்கில் சமீர் வர்மா முதல் செட்டை இழந்தார். ஆனாலும், மனம் தளராத சமீர் வர்மா இரண்டாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சமீர் வர்மா சிறப்பாக ஆடினார். இதனால் அவர் 21 -14 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் கைப்பற்றினார். 

இறுதியில், 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சீன வீரரை வீழ்த்திய இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 

இது சமீர் பெற்ற மூன்றாவது சாம்பியன் பட்டமாகும். ஏற்கனவே சுவிஸ் ஓப்பன் மற்றும் ஐதராபாத் ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SyedModiInternational #SameerVerma
Tags:    

Similar News