- சோனியா அகர்வால், அதிக வசனம் இல்லாமல், அதிக காட்சிகள் இல்லாமல் வந்து சென்று இருக்கிறார்.
- குட்டிப்புலி சரவணன், அண்ணன் தம்பியாக நடித்திருப்பவர்கள் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
அண்ணன், தம்பி இரண்டு பேர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அண்ணன் ஜாதிதான் உயர்ந்தது என்று வாழ்ந்து வருகிறார். இவரது மகன் வேறொரு ஜாதி பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களது காதல் விஷயம் தெரிந்து மகனை கண்டிக்கிறார். மேலும் காதலிக்கும் பெண்ணை மிரட்டவும் செய்கிறார்.
தம்பி அனைத்து ஜாதியினரும் சமம் என்று வாழ்ந்து வருகிறார். இவரது மகள் பள்ளியில் படிக்கும் சக மாணவனிடம் நட்பாக பழகி வருகிறார். மகளுடன் பழகும் மாணவன் வேற ஜாதியாக இருந்தாலும் மகளை பழக அனுமதிக்கிறார். இந்த ஜாதி பிரச்சினையால் அண்ணன் தம்பி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
அதே சமயம் இந்த ஊருக்கு வெளியே வசிக்கும் சோனியா அகர்வால், விவசாய கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.
இறுதியில் சோனியா அகர்வால் ஊருக்கு வெளியே வாழ்ந்து வர காரணம் என்ன? அண்ணன், தம்பி இருவரும் ஜாதி பிரச்சனை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், அதிக வசனம் இல்லாமல், அதிக காட்சிகள் இல்லாமல் வந்து சென்று இருக்கிறார். குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருக்கும் திலிப்ஸ், வர்ஷிட்ட சுகன்யா இருவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். குட்டிப்புலி சரவணன், அண்ணன் தம்பியாக நடித்திருப்பவர்கள் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
ஜாதி பாகுபாடு மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.குரு. ஜாதிதான் முக்கியம் என்று வாழும் மனிதர்களுக்கு சாட்டை அடி கொடுத்திருக்கிறார். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். காட்சிகள் அங்கு இங்குமாக தொடர்ச்சில்லாமல் செல்கிறது. நல்ல கதையை தெளிவில்லாத திரைக்கதை வைத்து இயக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு, இசை
ரஞ்சித் வாசுதேவன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராஜேஷின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறது.