செய்திகள்

ரவி ஷாஸ்திரி, பாங்கர் பதில் அளிக்காவிடில் வெளிநாட்டு தொடரை வெல்வது இம்பாசிபில்- கங்குலி

Published On 2018-09-04 14:08 GMT   |   Update On 2018-09-04 14:08 GMT
இங்கிலாந்து தொடரை இழந்தது குறித்து ரவி ஷாஸ்திரி, பாங்கர் பதில் அளிக்காவிடில் வெளிநாட்டு தொடரை வெல்லது இம்பாசிபில் என கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இங்கிலாந்து மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை.

தற்போதைய இந்திய அணியால் இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்ற முடியும் என்று முன்னாள் வீரர்கள் நம்பினார்கள். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், மோசமான பேட்டிங்கால் இந்தியா தோல்வியை சந்தித்ததால், அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு ரவி ஷாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்வது இயலாத காரியம் ஆகிவிடும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள இந்திய வீரர்களின் பேட்டிங் திறமை குறைந்து விட்டது என்று நம்புகிறேன். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. புஜாரா அல்லது ரகானே ஆகியோரிடம் உறுதிப்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டது. நான்கு வருடத்திற்கு முன்பு, அடிலெய்டில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த உத்வேகம் இந்த தொடரில் இல்லை. புஜாராவிற்கும் அப்படித்தான்.

ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடியபோது மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதற்கு தலைமை பயிற்சியாளரான ரவி ஷாஸ்திரி முழு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பதில் அளிக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்வது நடக்கக்கூடிய விஷயமாக இருக்காது’’ என்றார்.
Tags:    

Similar News