புதுச்சேரி

பிரசாரத்தை முடக்காதீர்கள் - 'தில்' இருந்தால் தேர்தலில் மோதுங்கள்: ஆதவ் அர்ஜுனா

Published On 2025-12-09 12:06 IST   |   Update On 2025-12-09 12:06:00 IST
  • தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.
  • புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

இந்தியாவுக்கே புதுச்சேரி காவல்துறை முன்னுதாரணமாக இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றி. இப்படி மக்கள் பாதுகாப்பை தமிழகத்தில் எங்கும் கொடுத்தது கிடையாது.

தமிழக முதலமைச்சரே தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள், எங்கள் பிரசாரத்தை முடக்காதீர்கள். காற்றை, வெள்ளத்தை நிறுத்த முடியுமா.? த.வெ.க. பிரசார பயணம் 72 நாளுக்கு பின் மீண்டும் இன்று முதல் தொடங்கிவிட்டது.

தலைவர் புதுச்சேரிக்கு ஏன் வருகிறார்? என கேட்கின்றனர். புதுச்சேரி மக்கள் நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருந்துவம், நல்ல போக்குவரத்துக்கு ஏங்குகின்றனர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது தமிழகத்தை போல புதுச்சேரிக்கும் செய்ய வேண்டும் என யோசித்தார்.

தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.

விரைவில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பிரசார கூட்டத்தை நடத்துவோம்.

புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர். அந்த ஏக்கம்தான் இந்த கூட்டம். 1970-ல் உருவானது போல புதுச்சேரியிலும் நல்ல முதலமைச்சரை விஜய் உருவாக்குவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News