காதலியின் உடல் எரிந்த நெருப்பில் குதித்த வாலிபர்- மருத்துவமனையில் கவலைக்கிடம்
- மனமுடைந்த காதலன் மது அருந்திவிட்டு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்குச் சென்றார்.
- வாலிபர் அளிக்கும் வாக்குமூலத்தை கொண்டு மேற்கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கமலி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த காதலன் மது அருந்திவிட்டு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்குச் சென்றார். அவர் தனது காதலியின் உடல் எரிநது கொண்டு இருந்த நெருப்பில் குதித்தார்.
இதனை கண்ட பெண் வீட்டார் அவரை மீட்டனர். மேலும் அவரைத் கடுமையாக தாக்கினர். இதனால் வாலிபர் சுயநினைவு இழந்தார். அங்கிருந்தவர்கள் படுகாயத்துடன் வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிகிச்சையில் உள்ள வாலிபர் அளிக்கும் வாக்குமூலத்தை கொண்டு மேற்கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.