இந்தியா
யமுனை விவகாரம்: இரவு 8 மணிக்குள் பதில் அளிக்க கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
- அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
- இரு மாநிலங்களுக்கும் இடையேயான உறவு பாதிக்கக்கூடும்.
புதுடெல்லி:
டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் யமுனை நதியில் அரியானா மாநில பாரதீய ஜனதா அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதுகுறித்து பாரதீய ஜனதா நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இத்தகைய குற்றச்சாட்டுகள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான உறவை பாதிக்கக்கூடும். எனவே புகாருக்குரிய ஆதாரங்களுடன் இன்றிரவு 8 மணிக்குள் கெஜ்ரிவால் தனது பதிலை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.