இந்தியா

கணவருடன் பிரச்சனை: பெண் உயிரிழந்ததால் வரதட்சணையை திரும்ப கொடுக்கக் கோரி போராட்டம்

Published On 2025-07-28 10:11 IST   |   Update On 2025-07-28 13:20:00 IST
  • கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
  • வரதட்சணையாக வழங்கப்பட்ட பணம், நகையை கொடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம்

தெலங்கானா மாநிலத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பணம், 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், லாவண்யா தனது தந்தையுடன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் கோபமடைந்த லாவண்யா உறவினர்கள் சுரேஷ் வீட்டின் முன்பு இருவரது உடல்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு இருதரப்பினருக்கும் இடையே

பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு கணவரது குடும்பம் ரூ.20 லட்சம் கொடுக்க முன்வந்ததை அடுத்து பெண்ணுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News