பழகிய பின் தங்கையை தூக்கி எறிந்ததால் ஆத்திரம்: கொழுந்தனின் மர்ம உறுப்பை அறுத்த பெண்..!
- கணவனின் தம்பி, தங்கையுடன் பழகி வந்துள்ளார்.
- வீட்டில் எதிர்ப்பு கிளம்ப, விலகி சென்றதால் கொழுந்தன் மீது, அண்ணிக்கு ஆத்திரம்.
தங்கையிடம் நன்றாக பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரம் அடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மவு ஐமாவில் உள்ள மல்கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் அசாரே. இவரது மகன் உதய். இவர் மஞ்சு என்பவரை திருமணம் செய்து உள்ளார்.
உதயின் இளைய சகோதரர் உமேஷ். இவருக்கு 20 வயது ஆகிறது. இவர் மஞ்சுவின் இளைய சகோதரியுடன் பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.
எனினும் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக அசாரே குடும்பத்தினர் அண்ணனுக்கு திருமணம் முடித்த அதே வீட்டில் திருமணம் முடிக்க விருப்பம் இல்லை என்பதால் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக உமேஷ் மஞ்சுவின் தங்கையின் தொடர்பில் இருந்து வெளியேற முயன்றார். மேலும் ஒரு மற்றொரு பெண்ணுடன் நெருங்கி பழகுவதில் ஆர்வம் காட்டியுள்ளார்.
இதனால் மஞ்சுவின் சகோதரி மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளார். யாரிடமும் பேசாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனால் அவருக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
தன் தங்கையின் இந்த நிலைக்கு கொழுந்தன்தான் காரணம். இதனால் பழி வாங்க வேண்டும் என மஞ்சுவுக்கு கடுமையான கோபம் ஏறியது.
ஒருநாள் வீட்டில் எல்லோரும் தூங்கும் வரை காத்திருந்தார் மஞ்சு. எல்லோரும் தூங்தியதை உறுதிப்படுத்திய பின்னர், கொழுந்தன் உமேஷ் படுத்திருந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு சமையல் அறையில் உள்ள கூர்மையான கத்தியுடன் சென்ற அவர், கொழுந்தனை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் மர்ம உறுப்பை கடுமையாக தாக்கி, அறுத்துள்ளார். இதனால் உமேஷ் வலியால் துடிதுடித்து ஐயோ என கத்தினார். உடனே மஞ்சு அந்த இடத்தில் இருந்து வெளியேறி தப்பிவிட்டார்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உமேஷ் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரை மருத்துவர்கள் காப்பாற்றினார். ஆனால் காயங்கள் முழுமையாக குணமடைய 6 முதல் 7 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மர்ம மனிதர்கள் யாரோ தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் கொழுந்தனை தாக்கியது அண்ணி என்பது தெரியவந்தது.
இதற்கிடையே போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்பதை அறிந்த மஞ்சு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.