இந்தியா

மேற்கு வங்காளம் : முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் பாஜகவில் இணைந்தார்

Published On 2024-03-07 09:33 GMT   |   Update On 2024-03-07 10:20 GMT
  • பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன்.
  • திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.

மேற்கு வங்காள பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார்

இதன் பின்னர் பேசிய அபிஜித், "பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் என்னால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்

மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசை அகற்றுவதற்கான அடித்தளத்தை இந்த மக்களவை தேர்தலில் உருவாக்குவதே எங்களின் பிரதான நோக்கம். மேற்கு வங்காளம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம். திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்தார்.

இந்நிலையில் பாஜகவில் சேர்ந்த அபிஜித் வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பாஜக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News