பனி படர்ந்த மலை பாதையில் ஆல்டோ செய்த தரமான சம்பவம் - வீடியோ வைரல்
- பலரும் தார் மாடலை வாங்கி இமய மலையை சுற்றிய பகுதிகளில் அதை பயன்படுத்த விரும்புவர்.
- வீடியோ வைரலாகி 2.38 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
செல்போனகளின் பயன்பாடு அதிகமாக உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், அதனை பயன்படுத்தி வித்தியாசமான வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிடுகிறார்கள். அப்படி பதிவிடப்படும் வீடியோக்களில் சில நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையிலும், சில வீடியோக்கள் நாம் மிகவும் பெரிதாக நினைக்கும் விஷயங்களை சிறிதாக காட்டும்.
அதே போல் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் சமூக வலைத்தளங்களில் தான் அதிகம் தேடப்படுகிறது. அதன் பயன்பாடு, தரம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்படுகிறது. அந்த வகையில், கார் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.
அதாவது, கார் பிரியர்களுக்கு பொதுவாக பல்வேறு மாடலான கார்களை வாங்கி அதில் பயணிம் செய்ய வேண்டும் என்ற ஆசை, கனவு இருக்கும். அதில் பெரும்பாலானோருக்கு தார் மாடலில் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். பலரும் தார் மாடலை வாங்கி இமய மலையை சுற்றிய பகுதிகளில் அதை பயன்படுத்த விரும்புவர்.
அதற்கு தங்களின் சொந்த வாகனத்தை பயன்படுத்த விரும்புவார்கள். அப்படி சுற்றுலா பயணிகள் கொண்டு சென்ற கருப்பு நிற மஹிந்திர தார் மற்றும் SUV கார் மாடல்கள் தண்ணீர் ஓடும் கரடு முரடனான பாதையில் பயணிக்க மிகவும் சிரமம்படுகிறது. ஆனால் மாருதி சுசுகி ஜிம்னி கார் கரடு முரடானா பாதையில் எளிதாக பயணிக்கிறது.
இது தொடர்பான வீடியோ வைரலாகி 2.38 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.