இந்தியா
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்பான வீடியோ போலியானது- மத்திய அரசு
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மன்னிப்பு கேட்பதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மன்னிப்பு கேட்பது போன்று பரவும் வீடியோ போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜெய்சங்கர் மன்னிப்பு கேட்பது போன்று வீடியோ உருவாக்கி வலைதளங்களில் பரப்பப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற தவறான வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.