இந்தியா

உ.பி.யில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 8 பேர் பலி

Published On 2023-12-10 09:34 IST   |   Update On 2023-12-10 11:02:00 IST
  • மோதிய வேகத்தில் கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
  • இதில் காரில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி பலியாகினர்.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் குழந்தை உள்பட 8 பேர் பயணம் செய்தனர்.

துபவுரா கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று டயர் பஞ்சர் ஆனது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.

சாலையின் நடுப்பகுதியில் இருந்த தடுப்பை தாண்டி மறுபுறத்தில் இருந்த சாலையில் கார் பாய்ந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. வேகமாக மோதியதில் கார் நொறுங்கி தீப்பிடித்தது.

இதில் காருக்குள் இருந்த குழந்தை உள்பட 8 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். காரில் எரிந்த தீயை அணைத்தனர். காருக்குள் 8 பேரும் கரிக்கட்டைகளாகி கிடந்தனர்.

கார் தீப்பிடித்து எரிந்தபோது அதிலிருந்து வெளியேற முயற்சி செய்தனர் என்றும், ஆனால் காரின் கதவுகளை அவர்களால் திறக்க முடியாததால் தீயில் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பலியான 8 பேரும் ஒரு திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News