இந்தியா

சிவசேனாவில் இணைய உத்தவ் தாக்கரே பா.ஜனதாவுடன் பேச வேண்டும்: ஏக்நாத் ஷிண்டே அணியினர் பேட்டி

Published On 2022-07-09 08:09 IST   |   Update On 2022-07-09 08:09:00 IST
  • மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
  • ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் இணைந்து தற்போது ஆட்சி அமைத்து உள்ளார்.

மும்பை :

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே 40 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைமைக்கு எதிராக திரும்பி பா.ஜனதாவுடன் இணைந்து தற்போது ஆட்சி அமைத்து உள்ளார். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியினர், அவர்கள் மீண்டும் சிவசேனாவுடன் சேர உத்தவ் தாக்கரே பா.ஜனதாவுடன் பேச வேண்டும் என கூறி உள்ளனர்.

மும்பையில் பத்திரிகையாளர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி மீண்டும் சிவசேனாவுடன் இணையுமா? என அந்த அணியின் செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கரிடம் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சியில் இந்த பிளவு ஏற்பட காரணமாக இருந்தவர்களிடம் (சஞ்சய் ராவத்) இருந்து உத்தவ் தாக்கரே சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். நாங்களும், பா.ஜனதாவும் தற்போது இணைந்து உள்ளோம். அவர் (உத்தவ் தாக்கரே) எங்களை அழைக்கும் போது, அவர் பா.ஜனதாவுடனும் பேச வேண்டும். எங்களை வாழ்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News