திரிணாமுல் காங்கிரஸ் 2021-ஐ விட குறைந்தது ஒரு தொகுதியாவது கூடுதலாக பிடிக்கும்: அபிஷேக் பானர்ஜி
- திரிணாமுல் காங்கிரஸ் 2021-ல் 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- வரும் தேர்தலில் பாஜக 3-ல் 2 பகுதி இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த வாரம் அமித் ஷா மேற்கு வங்கம் சென்றிருந்தார். அப்போது, மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் போன்ற சக்திகளுக்கு எதிராக என்னுடைய சண்டை இன்றிலிருந்து தொடங்குகிறது. என்னுடைய வார்த்தைக்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கடந்த 2021 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வென்றதோ, அதைவிட தற்போது குறைந்தபட்சம் கூடுதலாக ஒரு இடத்திலாவது வெற்றி பெறும்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
2021 தேர்தல் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டு 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.