இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் ஏன் பலமுறை கூறினார் - ராகுல் காந்தி கேள்வி

Published On 2025-07-23 11:53 IST   |   Update On 2025-07-23 11:53:00 IST
  • துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

இதனிடையே துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 3 ஆம் நாளாக இன்றும் பாரளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் பலமுறை கூறினார் என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக மாநிலங்களவையில் பேசிய கார்கே, "அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தலையீட்டால் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக 24 முறை கூறியுள்ளார். அவர் மீண்டும் மீண்டும் கூறுவது நம் நாட்டுக்கு அவமானகரமானது" என்று தெரிவித்திருந்தார். 

Tags:    

Similar News