இந்தியா

மின்கம்பியில் உரசிய ரதம்.. ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்ட பக்தர்கள்.. 6 பேர் பலி

Published On 2023-06-28 15:54 GMT   |   Update On 2023-06-28 15:54 GMT
  • காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அகர்தலா:

திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் குமார்காட் நகரில் இன்று ஜெகன்னாதர் ரத யாத்திரை நடைபெற்றது. இரும்பினால் செய்யப்பட்ட ரதத்தை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் சவுமுகானி பகுதியில் சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் ரதம் உரசியது. அப்போது ரதத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ரதம் இழுத்த பக்தர்கள் பலத்த மின் தாக்குதலுக்கு உள்ளாகி தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் ரதமும் தீப்பற்றியது.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குமார்காட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். அத்துடன், நேரில் பார்வையிடுவதற்காக குமார்காட் சென்றுகொண்டிருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News