இந்தியா

போக்குவரத்து நெரிசல்.. பைக்கை தலையில் சுமந்து சென்ற இளைஞர்.. வீடியோ வைரல்

Published On 2025-09-05 02:30 IST   |   Update On 2025-09-05 02:30:00 IST
  • தேசிய நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் ஜாமாகி நின்றன.
  • இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்க ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனது.

தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சமீபத்தில், குருகிராமில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தபோது தேசிய நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் ஜாமாகி நின்றன.

இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்க ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் சலித்துக்கொண்டனர்.

இந்த சூழலில், மணிக்கணக்கில் போக்குவரத்தில் சிக்கி காத்திருந்த இளைஞர் ஒருவர் சோர்வடைந்து தனது பைக்கை தலையில் சுமந்து சென்றார்.

அவருடன் மற்றொரு இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒத்தாசையாக நடந்து சென்றார். அவர் பைக்கை சுமந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

Tags:    

Similar News