பாராளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்: வெளிநடப்பு செய்த தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள்
- திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது.
- திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இதனால் பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இருஅவைகளும் கூடியதும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.