இந்தியா

'மஞ்சுமல் பாய்ஸ்' நிஜ நாயகன் கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி

Published On 2025-12-14 11:38 IST   |   Update On 2025-12-14 12:51:00 IST
  • எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சுபாஷ் சந்திரன்
  • கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.

மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் பின்னால் உள்ள உண்மைக் கதைக்கு சொந்தக்காரரான சுபாஷ் சந்திரன் ஏலூர் நகராட்சியில் உள்ள 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனநாயக முன்னணி வேட்பாளராக களமிறங்கினார்.

எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்த 46 வயதான சுபாஷ் சந்திரன், கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.

அப்போது அவரை நண்பர் ஒருவர் சக நண்பர்கள் உதவியுடன் மீட்டு கொண்டுவந்தார். இதை வைத்து இயக்கப்பட்ட 'மஞ்சும்மல் பாய்ஸ்' பெரு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சுபாஷ் சந்திரன் தான் போட்டியிட்ட ஏலூர் நகராட்சி வார்டில் வாக்கு எண்ணிக்கையில் 3-ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார்.  

Tags:    

Similar News