முஸ்லிம்கள் நலனுக்காக.. வக்பு திருத்த மசோதாவை ஆதரித்து தெலுங்கு தேசம் எம்.பி மக்களவையில் பேச்சு
- இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
- முஸ்லிம் மற்றும் சிறுபான்மை நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவைப் பாராளுமன்ற மக்களவையில் இன்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து பேசினார். இந்த திருத்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
அக்கட்சியை சேர்ந்த எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி இன்று பாராளுமன்ற விவாதத்தின்போது பேசியதாவது, "இந்த மசோதாவை வடிவமைப்பதில் தெலுங்கு தேசம் கட்சியின் பங்கு, முஸ்லிம்களமற்றும் சிறுபான்மையினரின் நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
எங்கள் கட்சி உருவானதிலிருந்து சிறுபான்மையினரின் நலனை உறுதி செய்வது எப்போதும் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது" என்று மசோதாவை ஆதரித்துப் பேசினார்.