இந்தியா

33% இடஒதுக்கீடு மசோதா முழுமைபெறாமல் உள்ளது - ராகுல் காந்தி

Published On 2023-09-20 14:06 GMT   |   Update On 2023-09-20 14:06 GMT
  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
  • நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும்.

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ராகுல் காந்தி மசோதாவை ஆதரித்து பேசியுள்ளார். மேலும், இந்த மசோதா முழுமை பெறாமல் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

 

இகு குறித்து பேசும் போது, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நான் ஆதரவளிக்கிறேன். இது நம் நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும். அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், பல்வேறு வழிகளில் அவர்கள் திறமை மிக்கவர்கள்."

"ஆனால், என் பார்வையில் இந்த மசோதா ஒருவிதத்தில் முழுமை பெறாமல் உள்ளது. எனக்கு ஓ.பி.சி. பிரிவை சார்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாதது முழுமை பெறாத ஒன்றாகவே இருக்கிறது. மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ள 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவை சேர்ந்தவர்கள். இந்த சமூக பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால், இந்த மசோதா முழுமையற்றதாக இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News