இந்தியா

ஆந்திராவில் தாயுடன் சந்தைக்கு சென்ற மாற்றுத்திறனாளி சிறுமி கடத்தி பலாத்காரம்- வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2023-08-26 11:40 IST   |   Update On 2023-08-26 11:40:00 IST
  • மகள் காணாமல் போனதால் அவரது தாய் மகளைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.
  • சிறுமி அழுதபடி நின்று இருப்பதை கண்ட அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி மண்டலத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் வாய்பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி.

அதே பகுதியை சேர்ந்தவர் மால்யாத்ரி (வயது 27). மாற்றுத்திறனாளி சிறுமியும் அவரது தாயும் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெறும் வாரச்சந்தையில் பொருட்களை வாங்க சென்றனர்.

அப்போது மால்யாத்ரியும் அங்கு சென்றார்.

சிறுமியின் தாய் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மால்யாத்ரி சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து தனது பைக்கில் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். மகள் காணாமல் போனதால் அவரது தாய் மகளைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.

இந்த நிலையில் மால்யாத்ரி சிறுமியை சந்தை அருகே விட்டுவிட்டு சென்றார்.

சிறுமி அழுதபடி நின்று இருப்பதை கண்ட அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.

அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து செய்கை மூலம் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள மால்யாத்ரியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News