உஸ்மான் ஹாடியை கொலை செய்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என வங்கதேசம் சொல்வது பொய்: பிஎஸ்எஃப்
- வங்கதேசத்தில் இளம் அரசியல் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
- இதனால் புதிதாக வன்முறை வெடித்தது. இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இன்குலாப் மோஞ்சோ செய்தி தொடர்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாடி.
இவர் தெருக்களில் இளைஞர்கள் போராடுவதற்கு தலைமை தாங்கினார். கடந்த 12-ந்தேதி டாக்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, ஹாடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18-ந்தேதி உயிரிழந்தார். இதனால் வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்டது.
இந்த நிலையில் ஹாடியை துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கும் இருவர் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என டாக்கா மாநகராட்சி போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வங்கதேச குற்றச்சாட்டை இந்திய எல்லை பாதுகாப்புப்படை மற்றும் மேகாலயா போலீசார் மறுத்துள்ளனர்.
மேகாலயாவில் உள்ள ஹலுயாகாத் செக்டார் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் தனிநபர் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிஎஸ்எஃப் அப்படி நுழைவது கண்டுபிடிக்கவும் இல்லை அல்லது எந்தவிதமான ரிப்போர்ட்டும் பெறவில்லை என மேகலயாகவில் உள்ள பிஎஸ்எஃப் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேசத்தின் குற்றசாட்டு ஆதாரமற்றது. தவறாக வழிநடத்துவதாகும் எனத் தெரிவித்துள்ளார்.