இந்தியா

பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு மாற்றம்

Published On 2025-12-29 00:29 IST   |   Update On 2025-12-29 00:29:00 IST
  • பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
  • இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

புதுடெல்லி:

பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தேர்வை வேறு ஒரு நாளில் மாற்றி நடத்த வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன.

இந்நிலையில், ஜனவரி 15-ம் தேதி நடப்பதாக இருந்த தேர்வு மாற்றப்பட்டு உள்ளது என பட்டயக் கணக்காளர்கள் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, ஜனவரி 15-ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 19ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தேதி மாற்றப்பட்டாலும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் செல்லுபடியாகும். மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தமது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பட்டயக் கணக்காளர்கள் கழகம் குறிப்பிட்டு உள்ளது.

Tags:    

Similar News