இந்தியா

மக்கள் விரும்புவதை எதிர்த்தால், உங்களுக்கு எப்படி வாக்குகள் கிடைக்கும்?: ராகுல் காந்திக்கு அமித் ஷா கேள்வி

Published On 2025-12-28 20:29 IST   |   Update On 2025-12-28 20:29:00 IST
  • ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.
  • ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற கிராம மக்கள் வாழும் நிலத்திற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் மக்களவையில் நடைபெற்ற விவாத்தின்போது, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்னிடம், ஒவ்வொரு முறையும் தன்னுடைய கட்சி தேர்தலில் ஏன் தோல்வியடைகிறது என என்னிடம் விசித்திரமான கேள்வியை கேட்டார். மக்களிடம் கேட்பதற்குப் பதில் என்னிடம் கேட்டார். ராகுல் பாபா, நான் இங்கு தொடங்கியுள்ள இந்த இரண்டு முயற்சிகளை நீங்கள் புரிந்துகொண்டால், உங்களுக்குப் பதில் கிடைத்துவிடும்.

தோல்விக்காக ராகுல் காந்தி காந்தி சோர்வு அடையக்கூடாது. ஏனென்றால், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் தேர்தலில் உறுதியாக காங்கிரஸ் தோல்வியடைய இருக்கிறது.

எங்களுடைய வெற்றிக்கு பின்னால் உள்ள காரணம், மக்கள் எங்களுடைய கொள்கையோடு இணைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ராமர் கோவில், பயங்கரவாதிகள் மீது சர்ஜிகல் தாக்குதல், சட்டப்பிரிவு 370 நீக்கம், பொது சிவில் சட்டம், முத்தலாக் சட்டம், வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு எதிராக பிரசாரம் ஆகியவற்றை எதிர்த்தது.

மக்கள் விரும்புவதை, நீங்கள் எதிர்த்தால், நீங்கள் எப்படி வாக்குகளை பெறுவீர்கள்? என்பதை எனக்கு சொல்லுங்கள்.

ஆனால், இத்தகைய ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.

Tags:    

Similar News