இந்தியா

தி.மு.க. அரசின் செயல்பாடுகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Published On 2024-03-29 07:49 GMT   |   Update On 2024-03-29 07:49 GMT
  • தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது.
  • பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

சென்னை:

பாராளுமன்ற தேரதல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்துள்ளார்.

மீண்டும் அவர் பிரசாரத்துக்காக தமிழகம் வருவதற்கு திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில், தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

"நமோ செயலி" மூலமாக இன்று மாலை 5 மணிக்கு நமது கடின உழைப்பாளிகளான பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளேன்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், திட்டங்களை பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் திறம்பட கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.

தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் சலிப்படைந்து சோர்ந்து போய் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News