இந்தியா

வேலைக்குச் செல்லுமாறு பலமுறை கூறியதால் ஆத்திரம்- மனைவியை குத்தி கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

Published On 2022-06-11 16:14 IST   |   Update On 2022-06-11 16:14:00 IST
  • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்தவர் விபோர் சாஹூ. அவரது மனைவி ரிது (23). ஓட்டுனராக வேலைப் பார்த்து வந்த விபோர் சாஹூ கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால், ரிது மற்றும் விபோர் சாஹூ இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ரிது, விபோர் சாஹூவை வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்துமாறும் பலமுறை தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சண்டை முற்றியதில் ஆத்திரமடைந்த விபோர் சாஹூ கத்திரியைக் கொண்டு ரிதுவை பலமுறை குத்திக் கொன்றுள்ளார். பின்னர், விபோர் சாஹூ தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இருவரும் நேற்று ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த விபோர் சாஹூவின் தாய் மற்றும் சகோதரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News