இந்தியா

எடப்பாடி பழனிசாமியின் அடுத்த கட்ட நகர்வு: அதிர்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம்

Published On 2023-11-27 10:44 GMT   |   Update On 2023-11-27 10:44 GMT
  • வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது.
  • ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தனிப்பட்ட காரணத்திற்காக மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துவிட்டு சிவில் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் தான் விசாரணையை தள்ளி வைக்கும் கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்து வருகிறார். எனவே அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இருவர் சார்பிலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைக்குமா? அல்லது நாளையே உத்தரவு பிறப்பிக்குமா? என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News