இந்தியா

திரவுபதி முர்முவுக்கு ஆதரவு- உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

Published On 2022-07-13 10:06 GMT   |   Update On 2022-07-13 10:06 GMT
  • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
  • இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்து அதிருப்தி குழுவுடன் இணைந்து பா.ஜனதா ஆட்சியை பிடித்து உள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட் கூறும்போது, "சிவசேனா நாங்கள் இருக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கிறது. ஆனால் அவர்கள் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை சிவசேனா ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை" என்றார்.

Tags:    

Similar News