இந்தியா

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் தயார்

Published On 2024-03-04 06:50 GMT   |   Update On 2024-03-04 06:50 GMT
  • பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழல் உள்ளது.

பெங்களூர்:

கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் உள்ள 24 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 பார்வையாளர்கள் சென்று கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்துரையாடி வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பெயர்களை சேகரித்து வந்தனர். அதில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் குறித்து கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். அதனடிப்படையில் கர்நாடக பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழல் உள்ளது. மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து தகுதியான வேட்பாளரை களமிறக்கி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News