இந்தியா

சட்டசபை தேர்தல்: தெலுங்கானா, சத்தீஸ்கரில் யாருக்கு வெற்றி? ஆய்வில் வெளியான தகவல்

Published On 2023-10-09 15:08 GMT   |   Update On 2023-10-09 15:08 GMT
  • யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிகிறது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐந்து மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற ரீதியில் கருத்து கணிப்புகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தனியார் நிறுவனம் (லோக் போல்) நடத்திய ஆய்வில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 56 முதல் 60 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பி.எஸ்.பி. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் இதர வேட்பாளர்கள் ஒரு இடத்தில் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது. இதே போன்று தெலுங்கானா மாநிலத்திலும் அதிகபட்சம் 44 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 61 முதல் 67 இடங்களிலும், பி.ஆர்.எஸ். கட்சி 45 முதல் 51 இடங்களிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆறு முதல் எட்டு இடங்களிலும், பா.ஜ.க. இரண்டு அல்லது மூன்று இடங்களிலும், இதர வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News