இந்தியா
null

'உதயம்' நிறுவனத்தை வசப்படுத்திய ரிலையன்ஸ்.. தமிழ்நாடு பக்கம் திரும்பிய அம்பானியின் கண்!

Published On 2025-12-19 10:56 IST   |   Update On 2025-12-19 12:23:00 IST
  • 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
  • உதயம் இனி தேசிய அளவிலான பிராண்டாக மாற்றப்படும் என்று ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான 'உதயம்' பிராண்டை ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் உதயம் அக்ரோ புட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, உதயம்ஸ் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் பெரும்பான்மையான பங்குகளைக் வைத்திருக்கும். அதேநேரம், பழைய உரிமையாளர்கள் ஒரு சிறிய பங்கைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.


சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் உதயத்தின் பருப்பு வகைகள், அரிசி, மசாலாப் பொருட்கள், தின்பண்டங்கள் போன்றவை தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

தமிழ்நாட்டின் பாரம்பரியமான மற்றும் நம்பகமான இந்த பிராண்டை, ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

குறைந்த விலையில் உதயம் இனி தேசிய அளவிலான பிராண்டாக மாற்றப்படும் என்று ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தென்னிந்தியாவின் உணவுப் பொருட்கள் சந்தையில் ரிலையன்ஸ் தனது பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News