இந்தியா

அத்வானியைப் போன்று யோகி-யின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் மோடி - கெஜ்ரிவால்

Published On 2024-05-11 14:15 IST   |   Update On 2024-05-11 14:15:00 IST
  • எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
  • என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்கு சிந்தத் தயார்.

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கியது. அதைத் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இல்லத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் அவரது தாயாரின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் கெஜ்ரிவாலை ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் உடன் இருந்தனர்.

அதை தொடர்ந்து ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி. தொடங்கி 10 ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த சிறிய கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை.

* ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 4 முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் ஆத் ஆத்மி கட்சியின் பலம் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

* தேசத்தின் மிகப்பெரிய ஊழல்வாதிகளை பா.ஜ.க.வில் இணைத்து வருகின்றனர். ஆனால் தான் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.

* நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என பிச்சை எடுக்க வந்திருக்கிறேன்.

* எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.

* என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்கு சிந்தத் தயார்.

* இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள்.

* பா.ஜ.க. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்கிறேன்.

* பிரதமர் மோடியும் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றார் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப்போவது யார்?

* ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சி இருக்கப்போவதில்லை.

* முதலமைச்சர் பதவி மீதும், பிரதமர் பதவி மீதும் எனக்கு ஆசை இல்லை.

* நமது அமைச்சர்கள், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜியின் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர்.


* பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்.


* எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, எம்.எல்.கட்டார், ராமன் சிங் ஆகியோரின் அரசியல் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், இன்னும் 2 மாதங்களில் உத்தரபிரதேச முதல்வரான யோகியை மாற்றி விடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News