கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
- கேரளாவில் கடந்த சில வாரங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது.
- கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது.
குறிப்பாக, கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம் உள்பட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல பகுதிகள் வெள்ளக் காடானது.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று தொடங்கிய பருவமழை படிப்படியாக அனைத்து மாநிலங்கள் என ஜூலை மாதம் வரை நாடு முழுவதும் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் எனவும், கேரளாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.