இந்தியா

வெளிநாட்டில் வாழும் மகன்கள்.. SIR படிவத்தில் தவறான விவரங்களை நிரப்பிய தாய் மீது வழக்குப்பதிவு

Published On 2025-12-07 02:15 IST   |   Update On 2025-12-07 02:15:00 IST
  • SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர்.

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு மேற்குவங்கம், கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் SIR படிவங்களில் தவறான தகவல்களை வழங்கியதற்காக உத்தரபிரதேச காவல்துறை நூர்ஜகான் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

ராம்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் உடைய இரண்டு மகன்கள் ஆமிர் கான் மற்றும் டேனிஷ் கான் ஆகியோர் நீண்ட காலமாக துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர்.

ஆனால் SIR படிவத்தில் நூர்ஜஹான் தனது மகன்கள் ராம்பூரில் வசிப்பதாக குறிப்பிட்டு போலி கையொப்பங்களுடன் கூடிய ஆவணங்களை பூத்-லெவல் அதிகாரியிடம் சமர்ப்பித்திருந்தது கண்டறியப்பட்டது.

SIR படிவத்தை டிஜிட்டல் முறைக்கு பதிவேற்றம் செய்யும்போது நூர்ஜஹான் அளித்த தகவல் தவறானது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர் தனது மகன்களின் கையொப்பங்களை போலியாக இட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த சூழலில், ராம்பூர் தேர்தல் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் நூர்ஜஹான் மீது போலீசார் BNS சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31 இன் கீழ் FIR பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News