டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் வீழ்ச்சி..!
- கடந்த வெள்ளிக்கிழமை 90.65 ரூபாயாக இருந்தது.
- இன்றைய வர்த்தக முடிவில் 90.72 ரூபாயாக உள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி பரிமாற்றம் இன்றைய சந்தை வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான இந்தியாவின் பண மதிப்பு 9 காசுகள் குறைந்து 90.74 ரூபாயாக உள்ளது.
டாலருக்கு நிகராக இந்தியாவின் பண மதிப்பு 90.66 ரூபாயுடன் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் 90.37 என முன்னேற்றம் கண்டது. இது நேற்றைய வர்த்தக முடிவின் மதிப்பை விட 28 பைசா முன்னேற்றமாகும். எனினும். 90.77 ரூபாய் என வீழ்ச்சியடைய தொடங்கியது. இறுதியாக 90.74 ரூபாயில் வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 90.65 ரூபாயாக இருந்தது. தற்போது 9 பைசா வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரம் இறுதியில் இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தது. இதனால் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 31 பைசா ஏற்றம் கண்டு 90.65 ரூபாயாக இருந்து.
கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.